போர்வெல் அமைப்பதை நிறுத்த வேண்டும்

ராமநாதபுரம், மார்ச் 24: ஆர்.எஸ்.மடை கண்மாய் பகுதியில் அமைக்கப்படுகின்ற போர்வெல் பணியை நிறுத்துமாறு ஆர்.எஸ்.மடை கிராமத்தினர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள ஆர்.எஸ்.மடை கிராமத்தில் 2ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இங்கு காவிரி கூட்டு குடிநீர் உள்ளிட்டவை சரியாக வராததால் ஆர்.எஸ்.மடை அருகிலுள்ள சக்கரகோட்டை கண்மாய் உள்வாய் பகுதியில் அமைக்கப்பட்டுள் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பட்டாலியன் போலீஸ் அலுவலக கட்டிடங்கள், குடியிடிருப்பு பகுதிக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக ஆர்.எஸ்.மடை செக்போஸ்ட் அருகில் ராட்சத போர்வெல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மிக ஆழத்தில் தோண்டக் கூடிய ராட்சத போர்வெல் என்பதால் அருகிலுள்ள கிணற்று நீர் உள்ளிட்ட உள்ளூர் நீர் ஆதாரங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே போர்வெல் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: