பாதுகாப்பு பணியில் 1,731 போலீசார் திருவாரூர் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

திருவாரூர், டிச.30: திருவாரூர் நகரில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக நகர வளர்ச்சி குழு தெரிவித்துள்ளது. திருவாரூர் நகர வளர்ச்சி குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும், செயலாளர் டாக்டர் செந்தில், பொருளாளர் அருண் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வர்த்தக சங்கத் தலைவர் பாலமுருகன், முன்னாள் தலைவர் அருள், பொதுச் செயலாளர் குமரேசன் மற்றும் பொறுப்பாளர்கள் கனகராஜன், டாக்டர் கோபாலகிருஷ்ணன், தர், வெங்கட் ராஜுலு, தியாகபாரி, அண்ணாதுரை மற்றும் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திருவாரூர் நகரில் சேதமடைந்துள்ள பனகல் சாலை ,நேதாஜி சாலை உட்பட அனைத்து சாலைகளையும் உடனே நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். நகராட்சி மூலம் வணிக நிறுவனங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்டு வந்த குப்பைகள் எடுக்கும் பணியானது தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு வணிக நிறுவனங்களில் குப்பைகளை அள்ளுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சுற்றி தெரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் உடனே நிறைவேற்றாவிட்டால் அனைத்து சேவை சங்கங்களையும் ஒருங்கிணைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: