தென்தாமரைகுளம்.டிச.30: சாமிதோப்பு இளைஞர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் சுண்டபற்றிவிளை மற்றும் வடக்குதாமரைகுளம் அணிகள் மோதின. திரைப்பட டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் வடக்கு தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலைவர் பார்த்தசாரதி, முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரெகுபதி, சாமிசுந்தர் உள்பட பொது மக்கள் கலந்துகொண்டனர்.