சூரிய கிரகணத்தையொட்டி திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள்

திருவாரூர், டிச.27: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதையொட்டி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வருவது சூரிய கிரகணம் ஆகும். அந்த வகையில் நேற்று காலை 8.06 மணி முதல் துவங்கிய இந்த சூரிய கிரகணமானது 11.20 வரையில் தொடர்ந்தது.இந்நிலையில் வழக்கமாக சூரியகிரகணம் என்றாலும் சந்திரகிரகணம் என்றாலும் இந்த கிரகணம் துவங்குவதற்கு முன்னாலும் முடிந்த பின்னரும் குளிப்பதும், வீட்டில்இருந்து வரும் பொருட்கள் மீது தர்ப்பை பில் போடுவதும் பொது மக்களிடம் வழக்கமான ஓன்றாக இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி இந்த கிரகண நேரங்களில் கோயில்களில் நடை பூட்டப் படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி திருவாரூர் பகுதியில் நேற்று பழனியாண்டவர் கோயில் உட்பட பல்வேறு கோயில்கள் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரும் மூலவரான வன்மீகநாதர் மற்றும் தியாகராஜருக்கு இந்த கிரகண நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜரை வழிபட்டனர்.

Related Stories: