ஜேக் அண்டு ஜில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கபிஸ்தலம், டிச. 25: கபிஸ்தலம் ஜேக் அண்டு ஜில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆலன் ரிச்சி வரவேற்றார்.பள்ளி ஒருங்கிணைப்பாளர் அகஸ்டா, பள்ளி முதல்வர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மாணவ. மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பரிசு பொருட்களை பகிர்ந்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக அய்யம்பேட்டை ஜெய கிறிஸ்து சபை போதகர் டேனியல், அவரது துணைவியர் ஏஞ்சல் ஜாய், பள்ளி டிரஸ்டி மைக்கேல் ராஜ் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வழங்கினர். விழாவில் ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் ஆற்றல் செய்திருந்தார்.

Related Stories: