பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, டிச. 24: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை கொல்கத்தா பிரேக் த்ரு சையின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தியது. கல்லூரி முதல்வர் முத்துவேலு தலைமை வகித்தார். கணினிதுறை தலைவர் வின்சென்ட் வரவேற்றார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் கதிர்வீச்சு பாதுகாப்புதுறை தலைவர் ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் மற்றும் பிரேக் த்ரு சையின்ஸ் சொசைட்டி சென்னை உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் பங்கேற்று சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள், எந்த விதமான பாதுகாப்பு உபகரணம் அல்லது பாதுகாப்பு கண்ணாடியும் இல்லாது சூரியனை பார்த்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கினர். மேலும் சூரிய கிரணம் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு எவ்வாறு பார்க்கலாம் என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு பயனடைந்தனர். கல்லூரி இயற்பியல்துறை பேராசிரியர் விசயராயன் நன்றி கூறினார். தென்னிந்தியாவில் 75 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய முழு சூரிய கிரகணம் வரும் 26ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய அறிவியல் உபகரணங்களை பயன்படுத்தி முழுமையாக கண்டு பயனடையலாம் என்றனர்.

Related Stories: