செம்பொன்ன ரங்கர் கோயிலில் கார்த்திகை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி, டிச.24: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான செம்பொன்னரங்கர் கோயிலில் கார்த்திகை மாத உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் சுவாதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை திருபாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: