பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

 

நாகப்பட்டினம்,ஜூன்18: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இறைவனின் துதரான இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தியாக திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதன்படி நேற்று நாகூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர் சிறுமிகளும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவாப் ஜாமியா மஸ்ஜித், காதிரியா மதரஸா,திவான்ஷா பள்ளி தெரு பள்ளி, செய்யது பள்ளி,ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித் ,பாத்திமா பள்ளி, தோழை சாஹிப் தைக்கால், ஆகிய இடங்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: