சர்வதேச கல்வி ஆராய்ச்சி திட்டம் அமிர்தா விஸ்வ வித்யா பீடம் - அரிசோனா பல்கலை ஒப்பந்தம்

கோவை,டிச.19: சர்வதேச தரத்திலான கல்வியை அளிக்கும் வகையில் கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம், அரிசோனா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததில் அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் வேந்தர் மாதா அமிர்தானந்தமயி மற்றும் அரிசோனா பல்கலைக்கழக கல்வி பிரிவு துணைத்தலைவரும், நிர்வாக தலைவருமான டாக்டர். லிசல் போல்க்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உயர்கல்வி தரம், இளநிலை மற்றும் முதுநிலையில் இரட்டை பட்டப்படிப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. பொறியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்தொழில் நுட்பம், சமூக அறிவியல், மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் விவசாய துறைகளை இரு பல்கலைக்கழக மாணவர்களும் பரிமாற்றம் செய்து கற்க உள்ளனர். இதில் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து அமிர்த விஸ்வ வித்யாபீடத்தின் துணைவேந்தர் டாக்டர்.வெங்கட்ரங்கன் கூறுகையில், வாழ்க்கைக்கான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அமிர்ந்தானந்த மயி அம்மாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தேடி அளித்து வருகிறோம். இத்திட்டத்தால் சர்வதேச அளவில் நிலையான மேம்பாட்டை அரிசோனா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க முடியும். என்றார்.

Related Stories: