வேளாண் அதிகாரி விளக்கம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

முத்துப்பேட்டை, டிச.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக தலைமையாசிரியர் நித்தையன் வரவேற்று பேசினார். இந்த நிகழ்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமை வகித்து பேசுகையில்,திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முத்துப்பேட்டை வட்டார வள மையத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் பல்வகை மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சக மாணவர்களுடன் இணைந்து பயின்று வரும் இத்தருணத்தில் அவர்களுக்கான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு சிறப்புக் கவனம் வழங்குவதில் வாயிலாக அத்தகைய மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டு சக மாணவர்களோடு இணைந்து பயில ஏதுவாக உள்ளது. இவ்வாறு இணைந்து கல்வி பயில்வதால் அவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்பட இயலும் என்பதை உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பயனடையும் வண்ணம் அவர்களை பள்ளியில் தக்கவைத்தல் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்காக ஆண்டுதோறும் ஒன்றிய அளவில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்றார். அதனை தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் நடந்த பல்வேறு போட்டிகளிலும் இந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டனர். போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உதவி திட்ட அலுவலர் கலைவாணன் பரிசுப் பொருட்கள், சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினார். வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், முருகபாஸ்கரன் ஆகியோர் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

இதில் இயன்முறை மருத்துவர் செல்வசிதம்பரம் சிறப்பாசிரியர்கள் சங்கர், அன்பரசன், சுரேஷ் கண்ணன், கன்னியா, பார்வதி, பகல் நேர மைய பராமரிப்பாளர் மலர்விழி உதவியாளர் இந்திரா மற்றும் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் செல்வசிதம்பரம், அன்பரசு, ஆசிரியர் பயிற்றுநர் தரன், மருதங்காவெளி பள்ளியின் ஆசிரியை மாலா, மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: