தூத்துக்குடியில் குடும்பநல நீதிமன்றம், போக்சோ கோர்ட்

தூத்துக்குடி, டிச. 16:  தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குடும்பநல நீதிமன்றம், போக்சோ கோர்ட்களை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுந்தர்  திறந்துவைத்தனர். தூத்துக்குடி  மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், நீதிமன்ற கட்டிடங்கள் திறப்பு விழா  மற்றும் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் கட்ட அடிக்கல்  நாட்டு விழா மற்றும் தூத்துக்குடி குடும்ப நல நீதிமன்றம் மற்றும் போக்சோ  நீதிமன்றங்கள் துவக்க விழா நடந்தது. விழாவில் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்ற சென்ை உயர் நீதிமன்ற  நீதிபதிகள் பாரதிதாசன், சுந்தர், ரூ.4.89 கோடி மதிப்பீட்டில்  புதிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தனர்.

மேலும்  சாத்தான்குளத்தில் ரூ.5.09 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.

 இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள   குடும்ப நல  நீதிமன்றம், போக்சோ கோர்ட்டை திறந்துவைத்தனர். விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற  ஜெகதீஸ் சந்திரா, கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அருண்  பால கோபாலன், மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா   முன்னிலை வகித்தனர். விழாவில் குடும்ப நல கோர்ட் நீதிபதி  சிவஞானம், போக்சோ கோர்ட் நீதிபதி குமார் சரவணன், சட்டபணிகள் ஆணைக்குழுவின்  செயலாளர் சாமுவேல் பெஞ்சமின்,  சார்பு நீதிபதிகள் மாரீஸ்வரி, அகிலாதேவி,  பரமேஸ்வரி, முன்சீப் ஜெயசுதா, மாஜிஸ்திரேட்கள்,  அரசு வக்கீல்கள்  ஆண்ட்ருமணி,  யுஎஸ்.சேகர்,  மூத்த வக்கீல்கள் திலக், சொக்கலிங்கம்,  கருப்பசாமி, ஆறுமுகப்பெருமாள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள்  தூத்துக்குடி,  திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம்  வக்கீல் சங்க பிரதிநிதிகள்,  பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: