திருச்செங்கோடு நகராட்சியில் 17 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்

திருச்செங்கோடு, டிச. 13: திருச்செங்கோடு நகராட்சியில் 17 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கினறனர். அதுவும் போதுமான அளவு வினியோகிப்பது இல்லை என நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று  நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையாளர்  சையத் கமால் முஸ்தபா தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர்  வேலாயுதம், துப்புரவு அலுவலர் நிருபன், ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பயனீட்டாளர் சங்க தலைவர் கொல்லபட்டி நடேசன் பேசுகையில், திருச்செங்கோடு நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. கொல்லப்பட்டி பாலிக்காடு பகுதியில் தேங்கும் சாக்கடை கழிவுநீரால், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வருகிறது.  நகரின் சாக்கடை கழிவுநீர் விவசாய  விளை நிலங்களில் பாய்வதால், விவசாயம் பாழடைந்துவிட்டது. இந்த பிரச்னை 20  ஆண்டுகளாக் உள்ளது  என்றார்.

 சமூக ஆர்வலர் செல்வரத்தினம் பேசுகையில், நகரில் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. 17 நாட்களுக்கு ஒருமுறை தான் காவிரி நீர் வருகிறது. அதுவும்  போதய அளவு வினியோகிப்பது இல்லை என்றார். வக்கீல் செந்தில் பேசுகையில், நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு பதிவு செய்தால், விணணப்பதாரர்களே பதிவிறக்கம் செய்யும் திட்டம் இருந்தும், திருச்செங்கோடு நகராட்சியில் அதனை அமல்படுத்தாமல், அலுவலகத்திற்கு  வரச்சொல்கின்றனர். இதனால் காலவிரயம் ஆகிறது என்றார்.  ஒய்வூதியம் சங்க பொறுப்பாளர் பேசுகையில், கூட்டப்பள்ளியில் அபார்ட்மெண்ட் வைத்திருப்பவர்கள் கழிவுநீரை மற்ற இடத்தில் பம்ப் செய்து விடுவதால் துர்நாற்றம்  வீசுகிறது என்றார்.மேற்கண்ட புகார்களுக்கு பதிலளித்துப் நகராட்சி ஆணையாளர்  பேசுகையில், தான் பொறுப்பேற்று சில நாட்களே ஆவதால், பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: