முத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்

முத்துப்பேட்டை, டிச.13: முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமையில் நடைபெற்றது.முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் கருத்தாளர்களாக இயன்முறை மருத்துவர் செல்வசிதம்பரம் சிறப்பாசிரியர்கள் சுரேஷ் கண்ணன், பார்வதி, ஆகியோர் செயல்பட்டனர். இதில் மாற்றுத்திறன் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி சக மாணவர்களோடு தொடர்பில் வைத்திருப்பது, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வது கற்றலில் மேம்படுத்துவது தினசரி வருகையினை மேம்படுத்துவது, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பயிற்சியில் வழங்கப்பட்டது.மேலும் கடந்த மாதம் ஒரு நாள் வழங்கப்பட்ட பயிற்சிக்கு பின் மாற்றுத்திறன் மாணவர்களிடம் உள்ள முன்னேற்றம் அல்லது வித்தியாசம் உள்ளதா? என்பது குறித்தும் பெற்றோர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சிறப்பாசிரியர்கள் அன்பரசன், கன்னியா, சங்கர், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் செய்திருந்தார்.

Related Stories: