டிரைவர் கைது வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம்

வலங்கைமான்,டிச.12: வலங்கைமானில் தென்திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது பக்தர்களால் தென்திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 1ம் தேதி முதல் தினமும் இரவு சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஆலயத்தின் கிழக்கு புறத்தில் உள்ள செயற்கை மலையில் திருப்பறங்குன்றம் சிவப்பிரகாசசுவாமிகள், மடத்தின் அறங்காவலர் சவுந்தர்ராஜன் சுவாமிகள் மஹாதீபத்தை ஏற்றினார்.

Related Stories: