பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

கும்பகோணம், டிச. 12: தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் சற்றே விலை குறைந்துள்ளது. தரமற்ற வெளிநாட்டு வெங்காயத்தை கொள்முதல் செய்ய வியாபாாிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் நிலை உருவானது. மேலும் மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது. பின்னர் அந்த வெங்காயத்தை பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் வெங்காயத்தின் விலை வெகுவாக குறைய துவங்கியது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு தினம்தோறும் திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சின்ன வெங்காயமும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெல்லாரி, பொடி பெல்லாரிகள் 100 டன் வருகிறது. இதை தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயம் தரமில்லாமலும், ருசி இல்லாமலும் உள்ளது. வெளிநாட்டில் அதிக விளைச்சலுக்காக ரசாயனத்தை தெளித்து சாகுபடி செய்வதால் அந்த வெங்காயத்தை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ள வெங்காயத்தை உரிய பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது கர்நாடகா, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் சின்ன வெங்காயம் மற்றும் பெல்லாரி வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சற்று குறைந்ததுள்ளது. பெல்லாரி வெங்காயம் ரூ.160க்கு விற்பனை செய்தது தற்போது ரூ.100 க்கும், பொடி பெல்லாரி ரூ.60 க்கு விற்பனை செய்தது தற்போது ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.180 விற்பனை செய்தது தற்போது ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பலத்த மழையால் வெங்காயத்தில் உள்ள வேரடி எனும் மேல் பகுதியிலும், மூக்கடி எனும் கீழ் பகுதியில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் 50 கிலோ மூட்டையில் 10 கிலோ வரை வெங்காயம் வீணாகி வருகிறது. தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகமாக உள்ளதால் விலை ஓரளவு சீராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எகிப்து நாட்டிலிருந்து வரும் வெங்காயத்தில் எந்தவிதமான சத்தும் இல்லை. மேலும் அதிகமான விளைச்சலுக்காக ஏதேனும் அதிக பாதிப்பை உண்டாக்கும் ரசாயனத்தை தெளித்து சாகுபடி செய்திருந்தால் அதை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 1957ம் ஆண்டு வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டபோது அமெரிக்கா நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அந்த வெங்காயம் தரமற்ற வகையில் ரசாயன கலவை இருந்ததால் அந்த வெங்காயத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு தேவையான வெங்காயம் வரத்துள்ளதால் நாங்கள் எகிப்து நாட்டு வெங்காயத்தை வாங்குவதில்லையென முடிவு செய்துள்ளோம். எனவே தமிழக அரசு, எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயத்தை தர பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: