உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல், டிச.11:  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்,  உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் மெகராஜ் பேசுகையில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தகுதி மற்றும் தகுதியின்மை விவரங்கள், வேட்புமனு பரிசீலனை நடைமுறைகள், வேட்புமனு நிராகரிக்க ஆணையம் தெரிவித்துள்ள நடைமுறைகள், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகள், தேர்தல் முகவர்களை நியமனம், தேர்தல் காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை, வாக்குச்சாவடி முகவர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்க கையேடு, அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத், உள்ளாட்சி தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பு பணி நடைபெறவில்லை எனக்கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹசீனாபேகம், கோவிந்தராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) அருளாளன், நகர திமுக பொறுப்பாளர் ஆனந்த், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முரளி, கம்யூனிஸ்ட்  குழந்தான் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: