வலையங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும்

மதுரை, டிச.10: வலையங்குளம் கண்மாய்க்கு நிலையூர் விரிவாக்கம் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடக்கோரி, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராம மக்கள், வீரணன் தலைமையில் கலெக்டர் வினய்யிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், “மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் பிர்கா மற்றும் விராதனூர் பிர்காக்களில் உள்ள பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர்கள் உள்ளன. வலையங்குளம் கண்மாய்க்கு கடந்த 10 ஆண்டுகளாக சரிவர தண்ணீர் வரத்து இல்லை. இதனால் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும் மழை சரிவர பெய்யாத காரணத்தால், இப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நிலையூர் விரிவாக்கம் கால்வாய் மூலம் எங்கள் பகுதி கண்மாய்க்கு, வைகை தண்ணீரை திறந்து உதவிடுமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: