அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்

மதுராந்தகம், டிச.10: அச்சிறுப்பாக்கம் அருகே  இரும்புலி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் காவல்படையை சேர்ந்தவர்கள், காவல், மருத்துவமனை, முதியோர் இல்லங்களை நேற்று நேரில் பார்வையிட்டனர். அச்சிறுப்பாக்கம் அருகே இரும்புலி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு இரும்புலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில், சமீபத்தில்  மாணவர் காவல்படை எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் சுமார் 20 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இதையொட்டி, இதில், இரும்புலி பள்ளி தலைமை ஆசிரியை  வள்ளி  ஏற்பாட்டின்படி, மாணவர் காவல்படை ஒருங்கிணைப்பாளர்கள் குமுதா,  உமாபதி ஆகியோருடன், சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் தினமும் நடக்கும் செயல்பாடுகளை நேரில் அறிந்து கொள்ளும் விதமாக அச்சிறுப்பாக்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

குறிப்பாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம் சென்ற  அவர்கள், அங்கிருந்த போலீசாரிடம், காவல் பணி குறித்து அறிந்து கொண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். இவை இரண்டும் உங்களுக்கு கிடைத்துவிட்டால், இந்த சமுதாயத்தில் நீங்கள் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளவேண்டும் என கூறினார். இதைதொடர்ந்து அச்சிறுப்பாக்கம் தபால் நிலையம், அரசு மருத்துவமனை, மேல்மருவத்தூர் தீயணைப்பு நிலையம், பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். முதியோர் இல்லத்தை மாணவர்கள் காண்பதால, அவர்களது எதிர்காலத்தில் முதியோர்களை அரவணைத்து செல்லும் மனப்பக்குவம் ஏற்படும் என்றனர்.

Related Stories: