அவினாசி ரோடு மேம்பாலம் சீரமைக்க கோரிக்கை

கோவை, டிச.9: கோவை அவினாசி ேராடு மேம்பாலம் 40 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த பாலத்தின் சுற்று சுவர் மற்றும் கீழ் பாலம் பகுதி சீரமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் இணைப்பு பகுதியை சீரமைக்காமல் விட்டு விட்டனர். பாலத்தில் ஆங்காங்கே பள்ளம், மேடு காணப்படுகிறது. சில இடங்களில் கம்பி வெளியே நீட்டி கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் வடிகால் சரி செய்யப்படவில்லை. மழை பெய்யும் போது கீழ் பாலத்தில் 12 அடி வரை நீர் தேங்கி விடுகிறது. சமீபத்தில் மழை ெபய்த போது மில் ரோடு நோக்கி சென்ற கார் ஒன்று பாலத்தின் தேங்கி மழை நீரில் மூழ்கியது. சோமசுந்தரா மில் பாலம், மில் ரோடு ரோடு, கூட் ஷெட் ரோடு, புரூக்பாண்ட் ரோடு பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளமாக அவினாசி ரோடு பாலத்தின் கீழ் தேங்குவது வாடிக்கையாக இருக்கிறது. இங்கே மழை நீர் வடிகாலை புதுப்பித்து சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: