காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் சமூக மேம்பாடு பயிற்சி முகாம்

காஞ்சிபுரம், டிச. 9: காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய அமைச்சரகம்,  காஞ்சிபுரம் நேருயுவகேந்திரா சார்பில் இளைஞர் தலைமைத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமைய தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா தன்னார்வலர் பிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பயிற்சி முகாமின் நோக்கம் பற்றி விவரித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பயிற்சி முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்களை  ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

இந்த மூன்று நாள் பயிற்சி முகாமில் பல்வேறு தலைப்புகளில் கல்லூரி பேராசிரியர்கள் விழிப்புணர்வு கருத்துரையாற்றினர்.

மேலும் மாணவர்களுக்கு பவ்வேறு போட்டிகள், பயிற்சிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ முத்து பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பி.எம்.குமார், கல்லூரி துணைமுதல்வர் ம.பிரகாஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆனந்தன், புண்ணியகோட்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: