நீச்சல்போட்டியில் 9 மதுரை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை மதுரையில் பாராட்டு விழா

மதுரை, டிச. 5: மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று மதுரையை சேர்ந்த 9 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்ததற்கு பாராட்டு விழா நடந்தது. தூத்துக்குடியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் இருந்து சென்ற 25 பேரில் 9 மாணவர்கள் பதக்கம் வென்று சாதித்தனர். சிஇஓஏ பள்ளி மாணவர் மீனாட்சி சுந்தரம் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4பதக்கங்களை பெற்றார். விகாசா பள்ளி மாணவி ரோஷினி 4 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். மீனாட்சிசுந்தரம், ேராஷினி இருவரும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Advertising
Advertising

அதுபோல வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் கிஷான் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலமும், மாணவி சஞ்சனாலெட்சுமி 1 வெள்ளி, 3 வெண்கலமும், வித்யாலயம் பள்ளி மாணவர் சுப்ரமணியம் 1 வெள்ளி, 1 வெண்கலமும் பெற்றனர். மேலும் ஜெயின் வித்யாலயா பள்ளி மாணவர் குருபிரசாத் 1 வெள்ளி, ஜீவனா பள்ளி மாணவர் சஞ்சன் 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இது தவிர விகாசா பள்ளி மாணவர் ஆதில் 1 வெண்கலமும், லட்சுமி பள்ளி மாணவர் மிக்ரோஷன் 1 வெண்கலமும் பதக்கம் வென்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பாண்டி ஆகியோர் மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

Related Stories: