14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

ஈரோடு, டிச. 5:  ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   ஈரோடு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 73387 20701 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பாண்டியனை 94432 75634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அழகிரியை 94425 62002 என்ற எண்ணிலும், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு மீனாகுமாரியை 74026 07076 என்ற எண்ணிலும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்கு தங்கவேலுவை 74026 07086 என்ற எண்ணிலும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள விஜயசங்கரை 74026 07082 என்ற எண்ணிலும், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு மணியை 73387 20704 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 மேலும் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு கந்தராஜாவை 73387 20705 என்ற எண்ணிலும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜேஸ்வரியை 74026 07074 என்ற எண்ணிலும், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சியாமளாவை 74026 07078 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். கோபி ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜசேகரனை 74026 07085 என்ற எண்ணிலும்,  தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு இந்திராணியை 74026 07088 என்ற எண்ணிலும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பொன்னம்பலத்தை 74026 07084 என்ற எண்ணிலும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராஜேந்திரனை 74026 07077 என்ற எண்ணிலும், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு செந்தில்குமாரை 74026 07075 என்ற எண்ணிலும், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு கிருஷ்ணமூர்த்தியை 74026 07083 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.   இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடக்கவுள்ள நிலையில் 14 பேர் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Related Stories:

>