குமரியில் மீண்டும் வெயில்

நாகர்கோவில், நவ.29: குமரிமாவட்டத்தில் நேற்று கொட்டாரம், மயிலாடி, மாம்பழத்துறையாறு, பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்திருந்தது. ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை காணப்பட்டது. இருப்பினும் நேற்று பகல் பொழுது முழுவதும் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.20 அடியாக இருந்தது. அணைக்கு 606 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 669 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 70.65 அடியாக இருந்தது. அணைக்கு 126 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 140 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் 15.48 அடியும், சிற்றார்-2ல் 15.58 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். முக்கடல் அணையில் 24 அடி நீர்மட்டம் உள்ளது.

Related Stories: