பந்தலூரில் கறவை மாடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்

பந்தலூர், நவ.29: ஊட்டி சோசியல் சர்வீஸ் சார்பில் கிராம புறப்பகுதியில் உள்ள பெண்களுக்கு கறவை மாடுகள் வளர்ப்பு முறை குறித்து விழிப்புணர்வு முகாம் பந்தலூரில்  நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் ஒருங்கிணைப்பாளர் சுந்தரி வரவேற்றார்.பந்தலூர் கால்நடை மருத்துவர் பாலாஜி கலந்துகொண்டு கறவை மாடுகள் வளர்ப்பு முறைகள் குறித்தும், தகுதியான கறவை மாடுகளை கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், மாட்டு கொட்டகை அமைத்தல். கறவை மாடுகளில் தீவன மேலாண்மை, கறவை மாடுகளுக்கான நோய் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கினார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும், கறவை மாடுகளில் சினை கால பராமரிப்பு காலநிலைக்கு ஏற்ற கறவை மாடுகளின் மேலாண்மை குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பாக்கியவதி நன்றி கூறினார்.

Related Stories: