பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி வெளியீடு

 

ஊட்டி, மே 24: சிபிஆர்., கல்வி மையம் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது. பன்னாட்டு பல்லுயிர் தினத்தை ஆண்டுதோறும் மே மாதம் 22ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் அனுசரிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக சிபிஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கோத்தகிரி அருகேயுள்ள கூக்கல்தொரை தேவமாதா நர்சிங் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

நிகழ்வில் கருத்துரை வழங்கிய கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, மனித குல பதுகாப்பிற்கு அனைத்து உயிரினங்களும் தேவை. அவற்றை பாதுகாப்பது நமது கடமை, என்றார். மேலும் இந்த ஆண்டு பல்லுயிர் பாதுகாப்பு தின தலைப்பாக சூழல் திட்டத்தில் அனைவரும் பங்கு வகிக்க வேண்டும் என்றார். நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய சங்க செயலாளர் ராமதாஸ், இயற்கை விவசாயம் செய்து பல்லுயிர், மண் வளம் பாதுகாப்பதில் அனைவரும் வலியுறுத்தி சூழலை பதிக்கப்போம் என்றார். தேவ சகோதரி டலிய பிரான்சிஸ் முதல் சுவரொட்டி வெளியிட்டு பேசினார். முடிவில் விரிவுரையாளர் அனிதா கமல் நன்றி கூறினார்.

The post பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: