4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி கொல்லத்தில்

திருவனந்தபுரம், நவ.22: ேகரள மாநிலம் கொல்லத்தில் 105 வயதான மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார்.

கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்வியை தொடர முடியாமல் பாதியில் கைவிட்டவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வயதானவர்களும் பயின்று வருகின்றனர் இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பறக்குளம் பகுதியை சேர்ந்த பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டிக்கும் கல்வி கற்க ஆசை ஏற்பட்டது. இவர் ஒன்பது வயதாக இருக்கும்போது குடும்ப சூழ்நிலை காரணமாக மூன்றாவது வகுப்பில் படிப்பை ைகவிட்டார். தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை.

இந்நிலையில் இவர் படிக்க விரும்புவதை அறிந்த கொல்லம் மாவட்ட எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார், பாகீரதியம்மாவுக்கு கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் நான்காம் வகுப்பிற்கு தேர்வு நடத்தப்பட்டது. பாகீரதி அம்மாள் உற்சாகமாக கலந்துகொண்டு தேர்வு ஏழுதினார். உலகிலேயே 105 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதியது பாகீரதியம்மாவாக தான் இருக்கும் என்று பிரதீப்குமார் தெரிவித்தார். பாகீரதியம்மாவிற்கு 6 குழந்தைகளும் 16 பேர குழந்தைகளும் உள்ளனர். இவரது இளைய மகள் தங்கமணி அம்மாள் (67) உடன் தற்போது வசித்து வருகிறார். பாகிரதியம்மாவின் மூத்த மகன் துளசிதரனுக்கு தற்போது 84 வயதாகிறது.

Related Stories: