திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு பேரணி

திருச்செந்தூர், நவ. 22:  திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, சுகாதாரப் பணிகளுக்கான மாவட்ட துணை இயக்குநர்  மருத்துவர் கீதாராணி உத்தரவின் பேரில், காயாமொழி வட்டார ஆரம்ப  சுகாதார நிலையம் சார்பில் திருச்செந்தூரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதையொட்டி திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக நடந்த விழிப்புணர்வு முகாமுக்கு டாக்டர் அஜய் தலைமை  வகித்தார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை மருத்துவர்கள் சோமசுந்தரம்,  மெட்வினோ தேவதாசன், சபிதா, கன்னியம்மாள் முன்னிலை வகித்தனர். பள்ளித்  தலைமையாசிரியை க.சங்கரி வரவேற்றார். திட்டத்தை விளக்கிப் பேசிய  தாய்- சேய் நலத்திட்ட மாவட்ட அலுவலர்  ஜெஸ்ஸிமேரி, டெங்கு விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்துத் துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவரும் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழிப்புணர்வுப் பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன்,  சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்  வெற்றிவேல்முருகன், மேற்பார்வையாளர் சின்னத்துரை, அங்கன்வாடி பணியாளர்கள்,  செவிலியர் கல்லூரி மாணவிகள், துளசி பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள்  மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ரத வீதிகள் வழியாக வலம் வந்த பேரணி பள்ளியை மீண்டும் வந்தடைந்தது.

Related Stories: