வீரசக்க தேவி ஆலய திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

ஓட்டப்பிடாரம், மே 9: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 68வது உற்சவ திருவிழா, நாளை(10ம் தேதி), நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயம், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை மற்றும் அதன் வளாக பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஷ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜ், காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, தனிப்பிரிவு போலீசார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

The post வீரசக்க தேவி ஆலய திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: