திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் தூசு தட்டப்படும் வாக்குச்சீட்டு பெட்டிகள்

திருப்பரங்குன்றம், நவ.22: திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் இருந்த வாக்குச்சீட்டு பெட்டிகள் தூசியடைந்து கிடந்ததால் அதனை தூசு தட்டி சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் இருந்து 324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 38 ஊராட்சி தலைவர், 27 ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட மூன்று மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுவதால் திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் உள்ள பழைய வாக்குச்சீட்டு பெட்டிகள் அனைத்தும் தூசு தட்டப்பட்டு மீண்டும் பத்திரமாக பாதுகப்பாக வைக்கப்பட்டது.

Related Stories: