மேலூர் நகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட குப்பை வண்டிகள் குப்பையில் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

மேலூர், நவ. 22: மேலூர் நகராட்சிக்கு என புதிதாக வாங்கப்பட்ட சிறிய வகையிலான குப்பை அள்ளும் வாகனங்கள் இது வரை பயன்படுத்தப்படாமல் குப்பையில் போடப்பட்டிருப்பது ஏன் என நகர் மக்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.

மேலூர் நகராட்சிக்கு என குப்பைகள் அள்ளுவதற்காக லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய தெருக்களிலும் சென்று எளிதில் குப்பைகள் அள்ளுவதற்கு வசதியாக சிறிய வகை வேன்கள் நகராட்சி சார்பில் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 20 சிறய வகை வாகனங்கள் வாங்கப்பட்டது.

ஆனால் வாங்கியது முதல் இது வரை 5 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சிய 15 வாகனங்கள் நகராட்சிக்கு பின்புறம் குப்பை போல் போடப்பட்டுள்ளது. இது வெயில் மற்றும் மழையில் அப்படியே விடப்பட்டுள்ளதால் இந்த வாகனங்கள் சேதமாகும் நிலையில் உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமாகி வருவதாக நகர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் விரைந்து இந்த வாகனங்களையும் நகரில் குப்பை அள்ள பயன்படுத்துவார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: