கழிப்பறைகளை பயன்படுத்த மக்கள் உறுதி ஏற்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, நவ.20:திறந்த வெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த மக்கள் உறுதி ஏற்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் உலககழிவறைதின விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியநாயகிபுரம் பொது சுகாதார வளாகத்தில் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமைவகித்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் பேசுகையில், கழிவறைஎன்பது நமது குடும்பத்தின் ஒர் அங்கம். நாம் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் பாதியளவு மருத்துவ செலவிற்கே சென்று விடுகிறது. இதனால் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இதற்கு காரணம் நோய்கள்.இந்த நோய்கள் வருவதற்கு காரணமாக திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படுகிறது.எனவே நமது குடும்பத்தினர் அனைவரும் கழிவறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்களையும் பயன்படுத்த வலியுறுத்த வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் முழு சுகாதார திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதைபயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தற்போதையசட்டங்கள் பொது இடங்களில் மலம் கழித்தல், குப்பைகளை கொட்டுதல் போன்றவற்றிற்கு அபராதங்கள் விதிக்க வழிவகுக்கிறது. எனவேஅதை தவிர்த்து கழிவறைகளை மட்டுமேபயன்படுத்துவோம் என மக்கள உறுதி எடுக்க வேண்டும் எனக்கூறினார். பின்னர் நகராட்சி துப்புறவு பணியாளர்கள்கழிவறைகளை சுத்தம் செய்தனர்.முடிவில் துப்புரவு மேற்பார்வையாளர் வீரையன் நன்றி கூறினார்.

Related Stories: