வேறு இடத்திற்கு மயானத்தை மாற்றுங்கள் உசிலம்பட்டி போத்தம்பட்டி மக்கள் மனு

மதுரை, நவ. 19: உசிலம்பட்டி அருகே எஸ். போத்தம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் உள்ள மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கிராமமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் உள்பட கிராமமக்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வினய்யிடம்  மனு அளித்தனர்.

அதில், ‘எஸ்.போத்தம்பட்டியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 60 குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிக்குள்ளேயே மயானம் உள்ளது. இங்கு பிணம் எரியூட்டுவதால், புகை மண்டலம் ஏற்பட்டு குடிநீர், உணவு மாசுபடுகிறது. குழந்தைகள், பெரியோர்களுக்கு தொற்றுநோய் உண்டாகிறது. எனவே, இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வருவதில்லை. மேலும் குடிநீர், தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, கழிப்பறை உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. இங்குள்ள பழைய காலனியிலும் இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், அடிப்படை வசதிகள் செய்து தர முன்வர வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: