கால பைரவர் கோயிலில் அஷ்டபைரவர் வேள்வி

திருப்போரூர், நவ.19: திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் 10ம் ஆண்டு மஹா கால பைரவாஷ்டமி அஷ்ட பைரவர் வேள்வி கடந்த 17ம் தேதி தொடங்கியது. அன்று மகா கணபதி வேள்வி, மகாலட்சுமி பூஜை, குபேர பூஜை ஆகியவை நடந்தது.இதைதொடர்ந்து நேற்று அஷ்ட பைரவர் நான்கு கால வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை துறையூர் ஆதீனம் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச சுவாமிகள், திருவலம் சர்வ மங்களா பீடம் சாந்தா சுவாமிகள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 8 மணிக்கு மகா காலஅஷ்டமி சிறப்பு யாகமும், இரவு 7 மணிக்கு 1008 செண்பகப்பூ அர்ச்சனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீகால பைரவ பெருமானுக்கு சிறப்பு அமுது படையலும் நடைபெறுகிறது.

Related Stories: