தோட்டக்கலை மற்றும் விவசாய விழிப்புணர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் அறுவடை செய்த பனங்கிழங்கு

பேர்ணாம்பட்டு, நவ.13: பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.   இதில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தோட்டக்கலை மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதன் செயல்முறை விளக்கமாக பள்ளி வளாகத்தில் சுறைக்காய், பூசணி, மூலிகை பிரண்டை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி உள்ளிட்ட செடிகளை நட்டு பராமரித்து வந்தனர். பின்னர், கடந்த 2 மாதத்திற்கு முன்பு பள்ளியில் உள்ள பனை மர விதையை சேகரித்து பள்ளி வளாகத்தில் நட்டு அதனை நேற்று முன்தினம் பனங்கிழங்காக அறுவடை செய்தனர்.  இதையடுத்து, பனங்கிழங்கை வேக வைத்து நார்ச்சத்து உணவு என்ற முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் குறித்த விழிப்புணர்வு பயிற்சியை பள்ளி ஆசிரியர்கள் ஓம்பிரகாஷ்,  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

Related Stories: