பென்ஷன் இல்லாமல் பெரும் சிரமம்

திண்டுக்கல், நவ. 12: ஒட்டன்சத்திரம் அருகே வெரியப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரம்மாள் (85). இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் பெயர் பழனிச்சாமி. ஒட்டன்சத்திரம் பேரூராட்சியாக இருந்த போது துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 40 வருடத்திற்கு முன்பு எனது கணவர் இறந்து விட்டார். அதிலிருந்து எனக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது. கடந்த ஒன்றரை வருடமாக பென்ஷன் எனக்கு வரவில்லை. இதனால் பெரும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை ஒட்டன்சத்திரம் நகராட்சி சென்று கேட்டேன். ஆனால் முறையாக பதில் சொல்ல மறுக்கின்றனர். எனவே எனக்கு மீண்டும் பென்ஷன் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories:

>