உயர் மின் கம்பிகளை மாற்று பாதையில் கொண்டு செல்ல விவசாயிகள் கலெக்டரிடம் மனு

திருப்பூர், நவ.12: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜய்கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். பல்லடம் வே.வாவிபாளையம் விவசாயிகள் : எங்கள் பகுதியில் தென்னை மற்றும் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கிய பகுதி ஆகும். தற்போது பவர்கிரிட் நிறுவனத்தின் புகளூர்- இடையர்பாளையம் திட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன், எந்த முன் அறிவிப்பும் இன்றி அளவீடு பணிக்கு வந்தனர். நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும், போலீசார் எங்களை கைது செய்து அளவீடு செய்தனர். நாங்கள் பவர்கிரிட்  நிறுவன திட்ட அறிக்கை மற்றும் முதலில் வந்த நாளிதழ் விளம்பரங்களில் எங்கள் கிராமம் வரவில்லை.

தென்னை மற்றும் விவசாயப் பயிர்கள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம்(பிஏபி) பாசனப் பரப்பில் வருகிறது. எனவே, எங்கள் பகுதியில் மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும். எங்கள் பகுதி வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆகவே மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பூர், கணபதிபாளையம் பகுதி பொதுமக்கள்: எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன், செந்தில் நகர் பகுதிகளில் ஏராளமான வசித்து வருகிறோம். இங்கு தண்ணீர், மின்சாரம், தெருவிளக்கு, பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகளின்றி பல வருடங்களாக தவித்து வருகிறோம். எனவே அடிப்படை வசதிகள் செய்து  தர வேண்டும்.

திருப்பூர் பிஷாப் உபகரசுவாமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்: எங்கள் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 2019-20 பயின்று வரும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. அதேபோல், 11ம் வகுப்பில் மொத்தம் 8 பிரிவுகள் உள்ளன.  இதில்,  11 ஹெச் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.  இதனால் எங்களது கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: