ஜோதிடத்தில் பட்டயம் பெற்ற 83 பேருக்கு பட்டமளிப்பு விழா

தென்காசி, அக். 8: தென்காசியில்  ஜோதிடத்தில் பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு திருவள்ளுவர் கல்வியல் டிரஸ்ட்  சார்பில் பட்டமளிப்பு விழா நடந்தது. மேலகரம் சமுதாய  நலக்கூடத்தில் நடந்த விழாவுக்கு திருவள்ளுவர் கல்வியியல்  டிரஸ்ட் மாநில தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் தாமோதரன்  நாயனார், முருகுசாமி, சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர்  செல்வகணேசன் வரவேற்றார். சுடலையாண்டி இறைவணக்கம் பாடினார். ரஞ்சனி,  சாவித்ரிஆனந்தன், வனஜாமாடசாமி, மகேஸ்வரி செல்வகணேசன்  குத்துவிளக்கேற்றினர். கேரள மாநிலம் பந்தளம் ராஜாவான மகம் திருநாள்  வர்மராஜா, மற்றும் அவரது தம்பி கேட்டை திருநாள் ராஜா வர்மா ஆகியோர்  கலந்து கொண்டு 83 பேருக்கு பட்டயங்களையும், பரிசு கேடயங்களையும் வழங்கினர்.   தென்மாவட்ட தலைவர் ஆனந்தன், முத்துசாமி, தேவராசு, செல்வதுரைநாயனார்,  மாரீஸ்வரன், முத்துராஜூ, ராமச்சந்திரன், நித்தியானந்த், பாஸ்கரன், கணேஷ்,  சுதர்சன், வெற்றிசெல்வன், மணிமாறன், மாதவன், ரெங்கத்துரை, சங்கர்,  மாணிக்கம், கஜேந்திரன், ஜெய்சங்கர், சாமி, கண்ணன், மகாலிங்கம் அபிநயா  கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

‘‘சபரிமலை விவகாரம் நல்ல தீர்ப்பு வரும்’’

விழாவிற்கு பிறகு பந்தள அரண்மனை ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு   10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் என்றுமே செல்லக் கூடாது என்பதுதான்  பந்தள ராஜா குடும்பத்தின் விருப்பமும், ஒட்டுமொத்த பக்தர்களின்  விருப்பமும் ஆகும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு, இந்த வாரம்  வரும் நிலையில் ஒட்டுமொத்த பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நல்ல தீர்ப்பு  வழங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம். மேலும்  தீர்ப்பு, எங்களது நிலைப்பாட்டுக்கு மாற்றமாக வரும் நிலையில் பந்தள  அரண்மனையில் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்,  என்றார்.

Related Stories: