வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.7: திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளுவர் சிலையை தஞ்சை பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்த விஷமிகளை கைது செய்யக்கோரியும், கண்டித்தும் திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிங்காரத்தோப்பிலுள்ள தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், கண்டன முழக்கமிட்டும் இயக்கம் நடத்தப்பட்டது. வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெய்குமார், நிர்வாகிகள் தர்மா, சந்துரு, பழனிவேல், அலங்கராஜ் மற்றும் தமுஎகச மாநகர தலைவர் இளங்குமரன், அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: