துவரங்குறிச்சி பகுதியில் காட்டு மாடுகள் தொல்லை: இரவு நேரத்தில் வயலிலேயே தங்கும் விவசாயிகள்

துவரங்குறிச்சி, ஏப். 28: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மலைப்பகுதிகள் உள்ளன. தற்போது வெயில் அதிக அளவில் உள்ளதால் காட்டு மாடுகள் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவிற்காக கூட்டம் கூட்டமாக வரும் காட்டெருமைகள் வனப்பகுதிகளில் இருந்து நிலப் பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்து தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கத்திரிக்காய், வெண்டைக்காய், நெற்பயிர்கள் மற்றும் பல வகையான பயிர்களையும் நாசம் செய்தும் சேதப்படுத்தியும் செல்கின்றன. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்து பயிர்களை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.

இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கமும் அதிகம் இருக்கும் என்பதால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வனப்பகுதியிலேயே கிடைப்பதற்கு வனத்துறையினர் வழி வகை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி இக்காட்டு எருமைகள் பகல் நேரங்களில் சாலையை கடக்கும் பொழுது சற்று அச்சத்துடனே அப்பகுதிகளில் பயணம் செய்ய நேரிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

The post துவரங்குறிச்சி பகுதியில் காட்டு மாடுகள் தொல்லை: இரவு நேரத்தில் வயலிலேயே தங்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: