தமிழக அரசுக்கு கோரிக்கை பொன்னமராவதியில் பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலர் குடியிருப்பு

பொன்னமராவதி,நவ.7: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலர் குடியிருப்பு வீடுகளை சீர் செய்ய வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மேற்கு பகுதியில் அலுவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு வேளாண்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாக இடிந்து சேதமடைந்தது. இதனால் இந்த குடியிருப்பில் யாரும் குடியிருக்கவில்லை. இந்த பகுதியில் இப்போது வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த குடியிருப்பை சுற்றி அரசு அலுவலகங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையினால் இப்பகுதியில் அதிக அளவு செடிகள் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது.

இங்கு பணிபுரியும் அலுவலர்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து பணிபுரிந்து செல்கின்றனர். பலர் அதிக வாடகை கொடுத்து குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள் சரிசெய்தால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள் குடியிருக்க வசதியாக இருக்கும். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்து கிடக்கின்றது. இந்த அலுவலர்கள் குடியிருப்பு வீ‘டுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும், அல்லது இந்த வீடுகளை சீர் செய்யவேண்டும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடித்துவிட்டு புதிதாக கட்ட வலியுறுத்தல் இந்த விளக்குகள் செயல்படாமல் பயனற்று காணப்படுகிறது. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் பல ஆயிரம் செலவு செய்து வைக்கப்பட்டும் எந்த பயனில்லாமல் காணப்படுவதால் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.

Related Stories: