வக்கீல்கள் நிதிமன்ற புறக்கணிப்பு

திருவில்லிபுத்தூர், நவ. 5:திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை  காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் பணியாற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் டெல்லியில் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், காவல் துறையை கண்டித்தும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர்களின் இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கதிரேசன், செயலர் திருமலையப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். புறக்கணிப்பு போராட்டத்தினால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு, நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டது.

Related Stories: