பெரணமல்லூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்களுக்கு நோட்டீஸ் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

பெரணமல்லூர், நவ.5: பெரணமல்லூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் ேகாரி நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கூட்ரோடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள ஒரு சிலர் நெடுஞ்சாலைத்துறை பகுதியில் கால்வாய் செல்லும் பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பெரணமல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால், ஆவணியாபுரம் கூட்ரோடு பகுதியையொட்டி உள்ள வயல் வெளிகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் பகுதியாக மாறியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வௌியானது. இதையடுத்து, கடந்த மாதம் வருவாய், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் குறியீடு செய்யப்பட்டது. இந்நிலையில், வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: