வேலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் அமைச்சர் வீரமணி பேச்சால் பரபரப்பு

வேலூர், நவ.5:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜய், மாவட்ட ெபாருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு கட்சியினரிடம் பூத்வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்கி பேசியதாவது:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது நமது கட்சிக்கு எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாக உள்ளது. எவ்வித சண்டை சச்சரவுகளுக்கும் இடமின்றி கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும்.பெரிய பலத்துடன் நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறவேண்டும். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும். பொருளாதாரத்தில் வேட்பாளர்கள் உயர்ந்தவராக இருக்கவேண்டும். குறிப்பாக அவர் அந்த பகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும்.வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, மாடல் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக நிதி பெறப்பட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர்களால் பணிகள் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அவர்களை அழைத்து நானும், கலெக்டரும் பேசியுள்ளோம். விரைவில் பணிகள் முடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்படும் எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவரை எதிர்த்து நமது கட்சிக்குள்ளேயே தனியாக களம் இறங்கக்கூடாது. வேலூர் மாநகராட்சியை கைப்பற்ற தயாராக இருக்கவேண்டும்.எம்பி தேர்தலின்போது குறைந்த எண்ணிக்ைகயில்தான் நாம் தோற்றோம். எம்பி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் பெறாமல் போனதற்கு பாஜகவின் மீது இருந்த அதிருப்தியே காரணம். இதனால் நமது வேட்பாளர் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1500 பூத்துகளில் தலா ஒரு பூத்துக்கு 2 அல்லது 3 வாக்குகள் இரட்டை இலைக்கு கூடுதலாக கிடைத்திருந்தாலே நாம் நிச்சயம் ெஜயித்திருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குள் தேர்தலுக்கு நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசியதால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் ேமற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதிஷ்குமார், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.பி.ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சி.கே.சிவாஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: