திருப்புத்தூரில் பள்ளி பாதையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்புத்தூர், நவ. 1: திருப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உள்ளே நுளையும் பாதையை சீரமைக்கக் கோரி நேற்று பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்புத்தூரிலுள்ள ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குச் செல்லும் பாதையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரூராட்சித் துறையினர் அருகிலுள்ள மருத்துவமனையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக இந்தப் பகுதியைத் தோண்டியுள்ளனர். பின்னர் பள்ளி செல்லும் பாதையை சீரைமைக்காமல் சென்று விட்டனர்.

இதுகுறித்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெறாததால் மாணவர்கள் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் நடக்கும் பாதையாக இருப்பதால் மிதிவண்டியை பள்ளிக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.  மழை நேரமாக இருப்பதால் சகதி ஏற்பட்டு மாணவர்கள் கீழே விழும் சூழ்நிலை இருப்பதாலும் பாதையை உடனடியாக சரிசெய்யக் கோரி மாணவர்கள் பள்ளிக்கூட வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்

டனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த திருப்புத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பரமதயாளன், வட்டாட்சியர் ஜெயலெட்சுமி மற்றும் டவுன் போலீசார் ஆகியோர் மாணவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி பாதை உடனடியாக சரிசெய்யப்படும் எனக்கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து வகுப்புகளுக்குச் சென்றனர். பின்னர் பேரூராட்சிப் பணியாளர்கள் மூலம் தற்காலிகமாக பாதை சரிசெய்யப்பட்டது.

Related Stories: