வாலாஜாபாத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் அரசு பொது மருத்துவமனை

வாலாஜாபாத், நவ.1: வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள்  செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தில் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம்  ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.  வாலாஜாபாத்தில் அரசு பொதுமருத்துவமனை  செயல்படுகிறது.  இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல், பிரசவம் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கும் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் முதல் சிகிச்சைக்காகவும்  இங்குதான் முதல் சிகிச்சை பெற்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட  பல்வேறு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

இந்நிலையில் வாலாஜாபாத் மருத்துவமனையின் முன்பகுதி தற்போது பெய்து வரும் மழையால் சேறும் சகதியும் ஆங்காங்கே குட்டை போல மழை நீர் தேங்கி  நோயாளிகள் வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இதனால் நோய் பரவும்  நிலை உள்ளது.  இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதி முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் இங்கு உள்ள மருத்துவமனைக்கு வருகிறோம்.  ஆனால் இங்கு சுகாதார சீர்கேடான நிலையில் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன.  இந்த சேரும் சகதியில் நாங்கள் நடந்து தான் இந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகாணப்படுகின்றன.

 இந்நிலையில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய அரசு மருத்துவமனை இதுபோன்ற சேரும் சகதியுமாக சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவது மன உளைச்சல் ஏற்படுத்துவதாக  உள்ளது என்று இப்பகுதி மக்கள் வருத்தம்  தெரிவிக்கின்றனர்.  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  வலியுறுத்துகின்றனர்.

Related Stories: