அறிவியல் இயக்கம் அறிவிப்பு முத்துப்பேட்டையில் கஜா புயலால் பாதித்த அரசு பெண்கள் பள்ளிக்கு புதிய கழிப்பறை வசதி

முத்துப்பேட்டை, நவ.1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் தொடர்ச்சியாக ஓவ்வொரு ஆண்டும் சிறப்பிடம் பெற்று வருவதால் 10மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் இந்த பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. மேலும் இப்பள்ளியில் படித்த மாணவிகள் ஏராளமானோர் டாக்டர்கள் உட்பட உயர்ந்த அரசு பதவிகளில் உள்ளனர். அதனால் ஆண்டுதோறும் மாணவிகளின் எண்ணிக்கை இந்த பள்ளியில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் சென்ற ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில் இப்பள்ளியில் பலத்த சேதமாகியது. இதில் மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை முற்றிலும் சேதமானதால் மாணவிகள் கடும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினகரனின் செய்தி வெளியானது. இதனை கண்ட இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும், சென்னை மிராக்கி ரோட்டரி சங்க தலைவருமான சிவபாலா ராஜேஷ், தான் படித்த இப்பள்ளியில் தானும் தனக்கு தெரிந்தவரான நல்லி சில்க் உரிமையாளர் நல்லி குப்புசாமி செட்டியார் உதவியுடன் கழிப்பறை கட்ட முன் வந்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி முதல் ரூ.5.50லட்சம் செலவில் பல்வேறு வசதிகளுடன் 10 கழிப்பறைகள் கட்டப்பட்டு பணி நிறைவு பெற்றது. இந்நிலையில் கழிப்பறை கட்டம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவி சிவபாலா ராஜேஷ் தலைமை வகித்தார்.மாவட்ட ஆளுநர்கள் சுந்தரமோகன், மணிறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். இதில் புதிய கழிப்பறையை நல்லிகுப்புசாமி திறந்து வைத்து பேசினார்இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், ரோட்டரி மாவட்ட தலைவர் மெட்ரோ மாலிக், முத்துப்பேட்டை தலைவர் சிதம்பர சபாபதி, செயலாளர் பத்மநாபன், பொருளாளர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை உமா மகேஷ்வரி நன்றி கூறினார்.

Related Stories: