பொன்னேரி, நவ. 1: மீஞ்சூர் அருகே எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதேப் பள்ளியை சேர்ந்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி மீஞ்சூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள். சிறுமி தினமும் நெய்தவாயல் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம், வேனில் பள்ளிக்கு சென்றபோது அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வரும் புதுபேடு கிராமத்தை சேர்ந்த ராமன் (37) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.