குஜராத்தில் இருந்து ₹3.50 கோடி மதிப்பிலான சோலார் பேனல்கள் வருகை வேலூர் மாநகராட்சி கட்டிடங்களில் அமைக்க

வேலூர், நவ.1: வேலூர் மாநகராட்சி கட்டிடங்களில் அமைக்க குஜராத்தில் இருந்து ₹3.50 கோடி மதிப்பிலான சோலார் பேனல்கள் வேலூர் மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர்  மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், அங்கன்வாடி மையங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங், கானாறு கால்வாய்களுக்கு தடுப்பு சுவர் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில், மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள், பள்ளிகள் என்று சுமார் 118 கட்டிடங்களில் ₹3.50 கோடியில் சோலார் பேனல்கள் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து கட்டிடங்களிலும் சோலார் பேனல்கள் வைப்பதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து. குஜராத்தில் இருந்து சோலார் பேனல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பேனல்கள் கடந்த வாரம் வேலூர் மாநகராட்சி 3வது  மண்டல அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று அதனை மாநகராட்சி கட்டிடங்களில் பொருத்துவதற்காக வேனில் கொண்டு சென்றனர். இந்த பணிகள் நிறைவடைந்தால், மாநகராட்சி  செலவிடும் மின்கட்டணம் பாதியாக குறையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: