வாசலில் தலை சீவியதால் பிரச்னை தேனியில் இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை

தேனி, அக். 31: வாசலில் நின்று தலைசீவியதால் ஏற்பட்ட பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால், மனமுடைந்த இளம்பெண் தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேனி ஓடைத்தெருவில் வசிக்கும் தனியார் வாடகை கார் டிரைவர் சதீஷ்குமார் மனைவி கிருஷ்ணவேணி(24). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் கார் ஓட்டும் பணிக்கு சென்றிருந்தார். கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் நின்று தலைசீவிக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி சந்திரன் என்பவர், ரோட்டில் நின்று தலையை விரித்துப்போட்டு சீவிக்கொண்டிருந்தால், நல்ல காரியத்திற்கு எப்படி போவது. வீட்டிற்குள் சென்று சீவ வேண்டியது தானே’ எனக்கூறி கண்டித்துள்ளார். அதற்கு கிருஷ்ணவேணி என்வீட்டு வாசலில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ எனக்கூறியுள்ளார்.

இதனாஙல இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் சந்திரன் ஆத்திரமடைந்து கிருஷ்ணவேணியை தாக்கி உள்ளார். இதனால் அவமானம் ஏற்பட்டு விட்டதால் தனது கணவன் சதீஷ்குமாருக்கு இந்த தகவலை தெரிவித்த கிருஷ்ணவேணி அவர் வீட்டிற்கு வரும் முன்னர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் கொடுத்த புகாரில் தேனி போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: