கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

பள்ளிப்பட்டு, அக்.31: கடந்த சில நாட்களாக பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளிலும் அருகேயுள்ள ஆந்திர  மாநில பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை நேற்று முழுகொள்ளளவான 233 மீட்டர் எட்டியது.இதனையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் திருத்தணி ஆர்.டி.ஓ. நடராஜன், பள்ளிப்பட்டு தாசில்தார் செந்தாமரைசெல்வி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் வெங்கடேசலு, பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைதுறை உதவிசெயற்பொறியாளர் இன்பநாதன் மற்றும் ஆந்திர அதிகாரிகள் முன்னிலையில் வினாடிக்கு 620 கன அடி நீர் திறக்கப்பட்டது.  

இதனால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் நெடியம், சாமந்தவாடா, புண்ணியம், கேசவராஜ்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: